top of page

ஒழுக்கமே உயர்வு

நாள்: 4-Oct-2024

இடம்: அல்-இஸ்லாஹ், முஹர்ரக்



"ஒழுக்கமே சுதந்திரம்" என்ற பரப்புரையின் அங்கமாக, ஒழுக்கமே உயர்வு என்ற தலைப்பின் கீழ் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தாருல் ஈமான், தமிழ் இஸ்லாமிக் சென்டரின் செயலாளர் சகோ. அன்வர் சதாத் தலைமை தாங்கினார்.


சிறப்புப் பேச்சாளர்களாக, செந்தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் நிறுவனர் சகோதரி பிரேமலதா எழிலரசு, MMI கல்வி மற்றும் பயிற்சி மைய இயக்குனர் Prof. பிரபாகர் வின்சென்ட் மற்றும் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டரின் துணைத் தலைமை பொறுப்பாளர் அன்வர்தீன் ஆகியோர் சிறப்புரையாற்ற வருகைபுரிந்தனர்.


விருந்தினர்களாக பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி சகோதரர் அப்துல் கைய்யும், சவுதியிலிருந்து சகோ அப்துல்காதர், சகோ ஷாஹுல் ஹமீது வருகைதந்தனர்.


நிகழ்ச்சியில் பல்சயம தமிழர்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்


இளவல் ஆதம் கிராஅத் ஓத நிகழ்ச்சி துவங்கியது,





தலைமையுரையாற்றிய சகோதரர் அன்வர்சதாத்  அவர்கள்  அனைவரையும் இனிதே வரவேற்று பின் இவ்வாறு பேசினார்:


சுதந்திரம் நமது பிறப்புரிமை என்றாலும் அதன் வரம்பு வரையறுக்கப்பட்டது.


கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் எல்லைமீறிச் சென்று சமூக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும்.


ஒழுக்கத்தையும், ஒழுங்குமுறையையும் நிலைநாட்டத்தான் அரசையும், அரசு இயந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.





அரசு, காவல்துறை, நீதித்துறை என எல்லாதுறையும் இவைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவேண்டும்.


இவை இல்லாதுபோனாலும், இவை தன்பணி செய்யாது போனாலும், ஒழுங்கீனமும், ஒழுக்கமின்மையும் சமூகத்தில் பரவலாகிவிடும்.


நம்மை படைத்த இறைவன் கற்பித்த

ஒழுக்கத்தை நாம் தனிமனித வாழ்விலும், கூட்டு வாழ்வாகிய சமூகத்தில் கடைபிடிக்கும்போது, உண்மையான அமைதி நிலவும்.


தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் வேலையை ஒருசாரார் துவக்கிவிட்டனர்.


இதன் விளைவு, மது, பாலியல் ஒழுக்கக்கேடுகள்,( துப்பாக்கி) வன்முறை கலச்சாரம் என பெருகிவிட்டன.


தனிமனித சுதந்திரத்தின் பெயரில் மேற்கத்திய நாடுகள் கடைபிடிக்கும் ஒழுக்கக்கேடானவைகளே அவர்களது ஒழுக்கமற்ற வாழ்வுக்கு, குடும்பச்சிதைவுக்கு, போதைக்கு அடிமையாகிப்போனதற்கு எல்லாம் காரணமாயிற்று.


உன்மையான சுதந்திரம் என்பது, தீண்டாமையிலிருந்து,

சாதிய ஒடுக்குமுறையிலிருந்து, மூடநம்பிக்கைகளிலிருந்து, பாசிசத்திலிருந்து விடுதலை பெறுவதே.


மாறாக ஒழுக்க விழுமியங்களை மீறுவதற்கல்ல என்றார்.


அடுத்ததாய் சொற்பொழிவாற்றிய சகோரி பிரேமலதா எழிலரசு:


காலந்தொட்டு நமக்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வந்தன,


பேசும் பேச்சில், உடுத்தும் உடையில், நடத்தையில், வழிபாட்டில் எல்லாவற்றிலும் அவை நமக்கு வழிகாட்டின,


சில நெறிமுறை ஒரு பகுதியில், ஒரு நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட, வேறு பகுதியில் அது நிராகரிக்கப்பட்டிருக்கும்,


ஆனால் சில நெறிமுறையில் எல்லைகளை கடந்து ஒழுக்கமாக எல்லோராலும் பாவிக்கப்படும்.



எந்த மனிதனையும் பாதிக்காத பேச்சு நடத்தைகளை நாம் கொண்டிருப்பது அதுவே சிறந்த ஒழுக்கம்.


என்னை காட்டிகொடுத்தவரை மன்னித்துவிடுங்கள், நிந்திக்காதீர்கள் என்ற ஏசு ( ஈசா அலை) அவர்களின் மன்னிக்கும் குணம் சிறந்த ஒழுக்கம்.


அரிச்சந்திரனைப்போல் பொய்பேசாதிருப்பது சிறந்த ஒழுக்கம்.


நபிகள் நாயகம் தன்னை துன்புறுத்தியவரை உடல் நலம் விசாரித்தது சிறந்த ஒழுக்கம்.


ஜீவா அவர்கள் குடிசைப்பகுதியில் வசித்ததும், இரண்டு வேட்டி மட்டுமே வைத்திருந்தது சிறந்த ஒழுக்கம்.



"கல்வியின் நோக்கம் அறிவு

அறிவின் பயன் பண்பு

பண்பின் வெளிப்பாடு நல்லொழுக்கம்"


ஒழுக்கமில்லாத கல்வியும்

மனிதநேயம் இல்லாத அறிவியலும்

விளைச்சலில்லாத விளைநிலமும் வீண்"

என மேற்கோள்காட்டினார்.


இந்தியர்களிடம்தான் ஒழுக்கமும், அறிவும் இருக்கிறது என்று பில்கேட்ஸ் கூறியதாக நினைவூகூர்ந்தார்


"கல்வியோடு ஒழுக்கம் போதிக்கப்படுகிறது இந்தியாவில்" என்றவர்


ஆனால் இன்றைய நாட்களில், சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது, தட்டிக்கேட்க வேண்டிய நாம் செல்பேசியோடு சுருங்கிவிட்டோம்.


"உழைப்பால் வரும் ஊதியம், நேர்மைதவறி ஈட்டும் பெருந்தொகையைவிட சிறந்தது" என மேற்கோள்காட்டி பேசினார்


மன அழுத்தம்போக்க என்று காரணம்காட்டி ஆரம்பிக்கப்படும் மதுப் பழக்கம்,நாளடைவில் அவனது தூக்கத்தையே கெடுத்துவிடுகிறது.


பள்ளிமாணவர்களை குறிவைத்து இன்றைக்கு பள்ளிவளாகங்களில் கூட  (கஞ்சா)போதைபொருள் விற்கப்படுகிறது.


தட்டிக்கேட்கவேண்டிய சமூகம் துரதிஷ்டவசமாக அமைதிகாக்கிறது.


துவக்கத்தில் ஒட்டடை போன்று ஒட்டிக்கொள்ளும் இந்த மதுப்பழக்கம் நாளடைவில் சங்கிலியாக கழுத்தை இறுக்குகிறது.


தீய பழக்கத்திற்கு அடிமையானவர்களை வெறுத்து ஒதுக்கிவிடாதீர்கள், அவர்களுக்கு நல்லொழுக்கத்தை போதியுங்கள்.


நாம் மட்டும் நல்லொழுக்கமானவர்களாக இருந்தால் போதும், நம்மைச்சூழ உள்ளவர்கள் எக்கேடு கெட்டால் எமக்கென என்று இருந்துவிடக்கூடாது என்றவர்,


நம்மைநாமே தனிமையில் தனிமைபடுத்திவிடக்கூடாது.


ஏதாவது பயிற்சி மேற்கொண்டு நம்மை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ளவேண்டும்.


அது நடைப்பயிற்சி, அல்லது விளையாட்டு போன்று ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும்.


நமக்குநாமே வரம்பு நிர்ணயித்து அதன் எல்லைக்குள் செயல்படவேண்டும்.


வாய்ப்புகள் பல கொட்டிக்கிடக்கின்றன, அதைப் பயன்படுத்தி, இலக்கினை நிர்ணயித்து, அதை நோக்கி கவனத்தை செலுத்திட வேண்டும் என்றுகூறி நிறைவூ செய்தார் சகோதரி பிரேமலதா எழிலரசு.


அடுத்தாற்போல்லசொற்பொழிவாற்றிய சகோதரர் பிரபாகர் வின்சென்ட்



ஸ்டீவ் இர்வினிடம் உங்களை அச்சுறுத்திய உயிரினம் எது எனறு வினவியபோது


"மனிதன்தான் என்னை அச்சுருத்திய உயிரினம்" என்றார்.


மனிதர்கள் கொடூரமானவர்களாகவே இருக்கின்றோம்.





சீர்திருத்தம் செய்ய வந்தவர்களையெல்லாம் கொன்று புதைத்தனர்.


சாக்ரடீஸும் தப்பவில்லை.


அகிம்சை போதித்த காந்தியடிகள் கொல்லப்பட்டார்.


நற்செய்தி கொண்டுவந்த ஏசு என்கிற ஈசா சிலுவையில் ஏற்றப்பட்டார்.


சுயகட்டுப்பாடு

சுய புறக்கணிப்பு

சுய ஒழுக்கம்,

நீதிநெறியோடு வாழ்வோம்

என கேட்டுக்கொண்டு நிறைவுசெய்தார்

சகோதரர் பிரபாகர் வின்சென்ட்


இறுதியாக சொற்பொழிவாற்றிய சகோதரர் அன்வர்தீன்:


ஆடல் பாடல் இங்கே அரங்கேற்றப்படவில்லை, மாறாக உங்கள் சிந்தனையை சற்று தூண்டிவிடும் பேச்சரங்கம்தான் இது என்றவர்.


ஒழுக்கத்தை குறித்து நம்மிடம் ஒருவர் வந்து போதித்தால் நாம் வெறுக்கிறோம்.


மனிதன் அழகானவனாக படைக்கப்பட்டுள்ளான், ஏதும் அறியாதவனாக பிறந்து, ஒவ்வொன்றாய் கற்றுக்கொள்ளும் இவன், ஒழுக்கத்தை மட்டும் கற்றுக்கொள்வதில்லையோ என எண்ணத்தோன்றுகிறது.


தவறுகள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவிக்கிடக்கிறது.


ஆண்கள் மட்டும்தான் தவறுசெய்வார்கள் என்ற  கருத்தோட்டத்திலிருந்து, இன்றைக்கு பெண்களும் தவறுசெய்ய துவங்கிவிட்டார்கள்.


இறைவன் தந்த பகுத்தறிவை மறந்துவிட்டு கடவுளையே குற்றம்சாட்டத் துவங்கிவிடுகின்றான் மனிதன்.


தேவாலங்கள், பள்ளிவாசல்கள், கோயில்களாக ஏராளம் இருக்கின்றன,





ஆனாலும் கொலை,கொள்ளை, லஞ்சம் விரவிக்கிடக்கிறதே ஏன்?


தான் ஆசைப்படும் ஒன்றை எப்படிவேண்டுமானாலும் எதைச்செய்தாகிலும் அடைந்துகொள்ளவேண்டும், என எண்ணம்தான் காரணம்.


ஒருவர் 23ஆண்டுகள் சீர்திருத்தம் செய்து இந்த அவலங்கள் இல்லாச் சமூகத்தை ஏற்படுத்தினார் என்றால் அவர் நபிகள் நாயகம் மட்டும்தான்.


இன்றைக்கு மனிதர்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது, எதைப்பேசினாலும் பிடித்திருக்கிறது,


ஆனால் இறைவனை பிடிப்பதில்லை, அவனைப் பற்றி பேசினால் ஏனோ பிடிப்பதில்லை.


ஒழுக்கத்தைப் பற்றி பேசினால் மட்டும் போதாது, அவைகளை கடைபிடிக்க பயிற்சி அளிக்கப்பட வேண்டும்


அதற்கான ஒரு மாத பயிற்சிதான் நோன்பு


ஒருமாதம் மன இச்சை, உடல் இச்சைகளை தவிர்த்துகொள்ளும் பயிற்சி பெற்றவர், ஏனைய 11-மாதங்களிலும் அதை கடைபிடிக்கும் பயிற்சியை பெற்றுவிடுவார்.


துரதிர்ஷ்டவசமாக மனிதர்களில் பெரும்பாலோனோர் அந்தப்பயிற்சியை கடைபிடிப்பதில்லை.


தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாகரிகமற்ற வாழ்வை நியாயப்படுத்துகின்றனர்.


ஆன்மீகம் வேறு வியாபாரம் வேறு

ஆன்மீகம் வேறு உறவுகள் வேறு

ஆன்மீகம் வேறு குடும்பம் வேறு


என பிரித்துப் பார்த்ததினால் ஏற்பட்ட பின்விளைவுகள்தான் எல்லா அனாச்சாரங்களுக்கும் காரணம்.


முஸ்லிம்கள் மது வட்டி, போன்ற தீமைகளைச் செய்யாமலிருந்து காரணம் இறையச்சத்தினால்தான் என ஒழுக்கம் பேணுவதற்கான வழிகாட்டுதலை தெளிவுபடுத்தினார்.


நோய் இல்லாத வாழ்வு வேண்டுமா? மன அமைதியை கடைபிடியுங்கள்.


மன அமைதி வேண்டுமா? ஒழுக்கத்தை கடைபிடியுங்கள், என்று முத்தாய்பாக பேசி நிறைவுசெய்தார்.


இறுதியாக, ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பின் கீழ் ஓவியம், கட்டுரை எழுதி வென்ற இளவல்களுக்கு கேடயமும்





போட்டியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறார்களுக்கும், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

நிகழ்ச்சியின் நோக்கம்

வருகைபுரிந்தோர் அனைவரும்

ஒழுக்கத்தை தாமும் கடைபிடிப்பதுடன், தன் குடும்பத்தார், தன்னைச் சூழல உள்ளோரிடமும் ஏவிடவேண்டும் என்ற எதிர்பார்பின் அடிப்படையில் அமைந்தது.


நிகழ்ச்சி நிரல் சிறப்பானதாக அமைய உழைப்பை நல்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஏக இறைவன் அருள் புரியட்டும், ஆமீன்


அல்ஹம்துலில்லாஹ்!!!



தகவல்

நிஜார் முஹம்மது

ஊடகப் பிரிவு

தாருல் ஈமான்- தமிழ்இஸ்லாமிக் சென்டர்,

பஹ்ரைன்



சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்கள்


Hearty congratulations for the grand success of the wonderful event sir. Kindly convey my best regards and heartfelt thanks to all your members and organizers for the kind support and cooperation. - Sister Premalatha Ezhilarasu

As usual, your event arrangement was excellent. Fortunately, few of my friends also had come to the event to witness. They evaluated and sent me a wonderful feedback about it. They said that the hospitality and all smiles of the volunteers was warm and friendly. The backdrop and the hall organizations were professional. The organizers and the volunteer team knew their roles well and executed it perfectly. The food that was served was very delicious and more than sufficient. I really loved coming there because your events have a social cause. God bless you and your families.   - Prof. Prabakar Vincent



Photo Gallery


Video Gallery











































82 views

Comments


bottom of page